ஜி.வி.பிரகாஷின் ’அடியே’ படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு!
Share
இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். பல படங்களில் நடித்துள்ள இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் பெரும் வெற்றி பெற்ற படம் என்பது இன்னும் அமையவில்லை. இதற்கிடையே விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கவுரி கிஷன் நடிப்பில் உருவான படம் அடியே. இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மல்டியூனிவர்ஸ் காதல் கதையில் உருவான இப்படத்தை பிரபா பிரேம்குமார் தயாரித்திருந்தார். அடியே படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். அதோடு வெங்கட்பிரபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்றிருந்த சில விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ஆனாலும் ஒரே மாதிரியான காதல் கதையா என்ற அதிருப்தியும் நிலவியது. இதனால் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கிடையே அடியே படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழு அண்மையில் வெற்றியை கொண்டாடியது.
இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 29-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













