LOADING

Type to search

சினிமா

பொங்கல் தினத்தில் வெளியாகும் லால் சலாம்

Share

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்ட நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், லால் சலாம் படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.