LOADING

Type to search

சினிமா

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

Share

பிரபல பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. காதல் கோட்டை படத்தில் இருந்து வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா.., பொற்காலம் படத்தில் இடம்பெற்றுள்ள தஞ்சாவூர் மண்ணு எடுத்து.., உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் கிருஷ்ணராஜ். சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான இவர், தேவாவின் இசையில் பல்வேறு ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.