முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி நடித்த ‘நிறம்’ படம் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது
Share
பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது. கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ‘நிறம்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இதில் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நிதின் சத்யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் முன்னோட்டம், விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் பின்னணி இசையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. படம் குறித்து இயக்குநர் பலராம் கிருஷ்ணா கூறுகையில், வட இந்தியாவில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஆறு பேரை மையமாகக் கொண்ட இந்த ஹைப்பர்லிங்க் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடைபெறும் சம்பவங்கள் இறுதியில் ஒன்றோடொன்று இணையும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது மருத்துவத் துறை சார்ந்த குற்றப் பின்னணியைக் கொண்ட திரில்லர் படம் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், ‘நிறம்’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் அறிவிக்கப்பட்டுள்ளது.










