LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது

Share

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.628 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.922 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, அரியானாவில் உள்ள பல்வால் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.159 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.178 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.