மாரி செல்வராஜின் “மஞ்சணத்தி” திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது
Share
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக ‘மஞ்சணத்தி’யை இயக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் ‘மஞ்சணத்தி’ என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது.













