LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, ஒரு முஸ்லிம் வேட்பாளர் அப்துல் அல் சயீத் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Share

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, ஒரு முஸ்லிம் வேட்பாளர் அப்துல் அல் சயீத் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நவம்பர் 3 அன்று நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் அப்துல் அல் சயீத் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸை அவர் தோற்கடித்தார்.

இதன் மூலம் எகிப்திய குடியேறிகளின் மகனான அப்துல் அல் சயீத், அமெரிக்க செனட் சபைக்குள் நுழையும் முதல் முஸ்லிம் ஆகினார். அப்துல் அல் சயீத் உடைய மனைவி டாக்டர் சாரா ஜுகாவின் குடும்பம், கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள பட்கல் நகரைச் சேர்ந்தது. மங்களூரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது. சாராவின் தாத்தா, ஜே.எச். ஷம்சுதீன் ஜுகாகு, வழக்கறிஞர், கல்வியாளர் மற்றும் அரசியல்வாதியாக இருந்தார். 1950களில் மைசூர் மாநில அரசில் அவர் துணை நிதி அமைச்சராகவும், பின்னர் மின்சாரத் துறை துணை அமைச்சராகவும் பணியாற்றினார். பட்கல் பகுதிக்கு மின்சாரம் வழங்குவதில் அவர் முக்கியப் பங்காற்றியதை உள்ளூர் மக்கள் இன்றும் நினைவுகூர்கின்றனர். அந்த ஊரில் உள்ள ஒரு சந்திப்பு ‘ஷம்சுதீன் சர்க்கிள்’ என்றும் அழைக்கப்படுகிறது. சாராவின் தந்தை, டாக்டர் தயேப் ஜுகாகு, பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் பயின்று, தற்போது அமெரிக்காவின் டெட்ராய்டில் சிறுநீரக மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் வென்று வரலாறு படைத்த இந்திய வம்சாவளி பெண் நித்யா ராமன் சாரா, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அப்துலை சந்தித்தார். அவர்கள் 2006ல் திருமணம் செய்துகொண்டனர். தொழில்ரீதியாக மருத்துவரான அப்துல், இதற்கு முன்பு டெட்ராய்ட் சுகாதாரத் துறையின் இயக்குநராகப் பணியாற்றினார். அமெரிக்காவில் சாமானியர்களுக்கான மருத்துவ செலவுகள் விண்ணை முட்டி வரும் சூழலில், ‘அனைவருக்கும் சுகாதாரம்’ போன்ற முற்போக்கான கொள்கைகளுடன் அவர் பிரச்சாரம் செய்து பொதுமக்களின் ஆதரவைத் திரட்டினார். தனது வெற்றிக்குப் பிறகு ஆதரவாளர்களிடம் உரையாற்றிய அப்துல், “மிச்சிகன் மக்கள் வெறுப்பை அல்ல, நம்பிக்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று கூறினார்.