திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
Share
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் தி.மு.க. பிரமுகரும் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகியுமான அரசக்குமார் மூலமாக ரூ.100 கோடி வரையில் லஞ்சப் பணம் பெற்றதாக முதலில் கூறப்பட்டது. இப்போது நீதிமன்றத்தில் காவல்துறை ரூ.400 கோடி வரை பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்த வழக்கில் கைதான அரசக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அன்பில் மகேசை 3 நாட்கள் காவலில் வைத்து காவல்துறை விசாரணை நடத்தினார்கள். கடந்த வாரம் காவல்தறை காவல் முடிந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அன்பில் மகேஷ் ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்திய மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது அன்பில் மகேஷ் தரப்புக்கும் அரசு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இரு தரப்பு வக்கீல்களும் பரபரப்பான வாதங்களை எடுத்து வைத்தனர். வாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், மனு மீதான தீர்ப்பு நவ.10-ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனு மீதான தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்ற காவல்துறை வாதத்தை ஏற்பதாக கூறி அன்பில் மகேஷ்-க்கு ஜாமின் இல்லை என்று கூறிய நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.













