விஜய் ஆண்டனி நடித்த ‘அப்பா குட்டி’ படத்தின் முன்னோட்டம் வெளியானது
Share
விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ரானி நடித்த ‘அப்பா குட்டி’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தந்தை மற்றும் மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவானதாகத் தெரியவருகிறது. தெலுங்கு மொழியில் ‘நாநா குட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர்கள் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன், ஹரிபிரியா, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கதாநாயகனாக நடிக்கும் விஜய் ஆண்டனியே இப்படத்துக்கு இசையமைப்பாளராகவும் உள்ளார். இந்த நிலையில், அப்பா குட்டி பட முன்னோட்டம் வெளியாகி உள்ளது.













