LOADING

Type to search

உலக அரசியல்

ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியமென நெதன்யாகு கூறியுள்ளார்

Share

இஸ்ரேல் தற்போது எதிர்கொள்ளும் சவால் காரணமாக ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியமென நெதன்யாகு கூறியுள்ளார். மொத்தம் 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அரபு கட்சி எம்.பி.க்கள் உள்பட 67 எம்.பி.க்கள், காடி ஐசன்கோட் தலைமையில் ஆட்சி அமைக்கப் பரிந்துரைத்துள்ளனா். தற்போதைய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 46 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த அக். 27-இல் நடைபெற்ற தோ்தலின் முடிவில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு 53 இடங்களும், காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணிக்கு 48 இடங்களும், அரபு கட்சிகளுக்கு (ஜாயின்ட் லிஸ்ட், ராஅம்) 19 இடங்களும் கிடைத்தன. பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், அவரின் கூட்டணிக் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசத்தின் 7 உறுப்பினா்கள் யாரையும் பரிந்துரைக்காமல் நடுநிலை வகித்ததால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதேநேரம், இஸ்ரேலில் நீண்டகாலமாக ஆட்சியிலுள்ள பெஞ்சமின் நெதன்யாகுவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, அரபு கட்சிகள் காடி ஐசன்கோட்டுக்கு ஆதரவளித்தன. இந்தநிலையில், புதிய அரசில் இணையும்படி ஐசன்கோட் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிக்கை விடுத்துள்ளார். அதில், இஸ்ரேல் தற்போது எதிர்கொள்ளும் சவால் காரணமாக ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியமென நெதன்யாகு கூறியுள்ளார்.