LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஶ்ரீ வரசித்தி விநாயகர் பிரதம குரு சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களுக்கு வழங்கப்பெற்ற கௌரவம்!

Share

“வித்யா பாரதி அறக்கட்டளையின் ‘கலா சேவா” சிறப்பு விருது பெற்ற நிகழ்வு

கனடாஶ்ரீ ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் முதல்வரும் பிரதமகுருவுமாகிய சிவாகம கலாநிதி, சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்களுக்கு “வித்யா பாரதி கலா சேவா’’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் 24ஆம் சனிக்கிழமையன்று நடைபெற்ற மேற்படி நிறுவனத்தின் 4-ஆவது ஆண்டு விழாவில் வித்யா பாரதி கலா சம்மேளனத்தினால் (4th Annual Vidya Bharati Kala Sammelan), ஐயா அவர்களுக்கு கலாச்சார மேம்பாட்டாளருக்கான (Cultural Promoter Award ) “வித்யா பாரதி கலா சேவா விருது” வழங்கப்பெற்றுள்ளது.

நமது பாரம்பரியம், கலாச்சாரம், கலைகள் மற்றும் ஆன்மீக விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்து, கனடாவில் அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கும் இவரது அயராத அர்ப்பணிப்பிற்கும், சமூகப் பணிகளுக்கும் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம் இதுவாகும் என்று அன்றைய விருது வழங்கும் விழாவில் சபையோர் முன்னிலையில் அறிவிக்கப்பெற்றது முக்கிய அம்சமாகும்.

இவ் விருது வழங்கும் விழாவில் கனடா அரசின் தொழிலாளர் துறை செயலாளர் ஜான் ஜெருசெல்லி (Hon. John Zerucelli), சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி. ஐ. லட்சுமணன் மற்றும் Sugshe குழுமத் தலைவரும் தொழிலதிபருமான கணேசன் சுகுமார் அவர்கள் ஆகியோர் இணைந்து இவ்விருதை வழங்கிச் சிறப்பித்தனர்.

ஆலயப் பணிகளிலும், சமூகத் தலைமைத்துவத்திலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் ஈடுபாடு காட்டி வரும் சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்களுக்கு இந்த விருது வழங்கப்பெற்றுள்ளமை தொடர்பாக பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன