LOADING

Type to search

இலங்கை அரசியல்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்!

Share

பு.கஜிந்தன்

உயர் பாதுகாப்பு வலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோத திஸ்ஸ விகாரையானது அமைக்கப்பட்டது.

இந்த விகாரைக்கு காணியின் உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் குறித்த விகாரையில் போயா தினமான நாளையதினம் வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இன்றையதினம் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.