LOADING

Type to search

இந்திய அரசியல்

பெரியார் அறிவுலக புத்தக மோசடியில் அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டனர்

Share

பெரியார் அறிவுலக புத்தக மோசடியில் அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த அக். 16 ஆம் தேதி முதல் அமைச்சர் விஜய்யால் திறந்துவைக்கப்பட்டது. 7 தளங்களைக் கொண்ட இந்த நூலகத்துக்கு புத்தகங்களை வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், திமுக மற்றும் தவெக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நூலகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றப்பட்டது. நூலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேரில் சோதனை நடத்தி ஆவணங்களைச் சரிபார்த்தனர். இதன் அடிப்படையில் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை சோதனையில் ஈடுபட்டனர்.