LOADING

Type to search

சினிமா

பார்வையாளர்களை நகைச்சுவையுடன் வைத்திருக்கும் திரைப்படம் “டைட்டானிக்”

Share

பார்வையாளர்களை நகைச்சுவையுடன் வைத்திருக்கும் திரைப்படம்  “டைட்டானிக்”. சி.வி.குமார் தயாரிப்பில் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “டைட்டானிக்”. ராகவ் விஜய், கலையரசன், காளிவெங்கட் மூவரும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்கிறார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களது கடந்த கால காதல் பற்றி பேசிக் கொள்கிறார்கள். ரயீல் பெங்களூர் வந்ததும் விஜௌ ராகவ் தனது திருமணத்துக்கு அழைக்கிறார். அவர்களும் திருமணத்துக்கு செல்கிறார்கள். திருமணத்தில் இம்மூவருக்கும் ஒரு பெறும் அதிச்சி நடக்கிறது. அது என்ன என்பதுதான் கதை. ராகவ் விஜய், காளிவெங்கட், கலையரசன் ஆகிய மூவரின் வாழ்க்கைத் துணைகளை ஒரே புள்ளியில் பிணைத்திருக்கும் இயக்குநர் ஜானகிராமனின் கற்பனையை பாராட்டாமலிருக்க முடியாது. படம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்து சிரிக்க வைத்து கைத்தட்டலை பெறுகிறார். வழக்கமான தனது எதார்த்தமான நடிப்பால் கலையரசன் கவனத்தை ஈர்க்கிறார். காதல் அனுபவங்களை நகைச்சுவை கலந்து வெளிப்படுத்தும் காட்சிகளில் காளி வெங்கட் தனது தனித்துவமான நடிப்பால் சிரிக்க வைக்கிறார். திருமணத்தின்போது முன்னாள் காதலி வந்து நிற்பதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் காட்சிகளில் ராகவ் விஜயின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. ஆனந்தியின் நடிப்பு அபாரம், கதாபாத்திரத்தின் தன்மையை நன்றாக உணர்ந்து நடித்திருக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். காதல் கதைகளுக்குள் இடம்பெறும் சுவாரசியமான சம்பவங்களை இன்னும் கொஞ்சம் வலுவாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்திருந்தால் படம் கூடுதலாக ரசிக்க வைத்திருக்கும். பாலுவின் ஒளிப்பதிவு ரயில் பயணக் காட்சிகளை அழகாகக் காட்சிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. படம் ஆரம்பம் முதல் முடிவுவரை பார்வையாளர்களை நகைச்சுவையுடன் வைத்திருக்கிறார் இயக்குநர் ஜானகிராமன்.