LOADING

Type to search

இலங்கை அரசியல்

75வது மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு ஆளுநர் செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

Share

பு.கஜிந்தன்

75ஆவது உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வட மாகாண சமூக மட்ட அமைப்புகள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்தனர்.

மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் இன்று (11) காலை வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடை சட்டத்தை உடன் நீக்குதல், கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதியான- விரைவான விசாரணையை முன்னெடுத்தல், மனித சித்திரவதைகளை நிறுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை விரைவுபடுத்துதல், பூநகரி – பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வு, சிமெந்து தொழில்சாலை அமைப்பையும் உடன் நிறுத்துதல், மன்னார் தீவில் கனியமண் அகழ்வை உடன் நிறுத்துதல், மன்னார் தீவில் காற்றாலை மின்சாரத்தை அமைக்காது அதனை வேறுபகுதிக்கு மாற்றுதல் ஆகிய 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.