Ontario’s Minister and MPP, Hon, Raymond Cho, hosted ‘2024 New Year’s Levee’
Share
ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு
ஒன்றாரியோவில் அனைத்து மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றவராகவும் நன்கு அறியப்பெற்றவராகவும் விளங்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு 18-01-2024 வியாழக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி விழாவிற்கு அழைக்கப்பெற்ற விருந்தினர்களாக ரொறன்ரோ மாநகர போக்குவரத்து ஆணைக்குழுவின்(TORONTO TRANSIT COMMISSION CHAIRMAN) தலைவர் கவுன்சிலர் ஜமால் மேயர்ஸ் மற்றும் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் அங்கு கூடியிருந்தனர்.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லோகேந்திரலிங்கம் அவர்களும் அங்கு விசேட அழைப்பின்பேரில் சமூகமளித்திருந்தார். இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
அங்கு கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான உணவளித்து மகிழ்ந்தார் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள்.