LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்நாட்டில் மரணத்தைத் தழுவிய போராளி சாந்தன் அவர்களின் பூதவுடல் தற்போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி திறந்த வாகனமொன்றி உடுப்பிட்டி நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது

Share

யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர் லோகதயாளன்

தமிழ்நாட்டில் மரணத்தைத் தழுவிய போராளி சாந்தன் அவர்களின் பூதவுடல் தற்போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி திறந்த வாகனமொன்றிஎடுத்துச் செல்லப்படுகின்றதுதொடர்ந்து இலங்கை நேரப்படி காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே காணப்படும் படங்கள் வவுனியா நகரத்திற்கு அருகில் இறுதி ஊர்வலம் நடைபெற்ற போது எடுக்கப்பட்டவையாகும்

பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த நாள் திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.