LOADING

Type to search

இலங்கை அரசியல்

அம்பாறை ஆலையடிவேம்பில் டினோஜன் வாள்வெட்டுகுழுவின் தாக்குதலில் 7 பேர் படுகாயம் மக்கள் பயப்பீதியில்

Share

(கனகராசா சரவணன்)

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டினோஜன் வாள்வெட்டு குழு வீடு ஒன்றில் புகுந்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதலில் மேற்கொண்டதுடன் வீதியால் சென்றவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வீடு ஒன்றின் பொருட்களை அடித்து சேதமாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவு இடம் பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

டினோஜன் வாள்வெட்டு குழுவினருக்கும் வாச்சிக்குடா பிரதேவத்தைச் இளைஞர் ஒருவருக்கும் இடையே மரணவீடு ஒன்றில் வாய்தர்கம் ஏற்பட்டது இதன்காரணமாக குறித்த இளைஞனை பழிவாங்குவதற்காக அவனின் வீட்டை சம்பவதினமான நேற்று இரவு 7.30 மணியளவில் டினோஜன் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த 10 மேற்பட்டவர்கள் மோட்டர் சைக்கிள்;களில் வாள்களுடன் அவரை தேடி சென்ற நிலையில் அவர் அங்கு இல்லாத நிலையில் அந்த பகுதியில் வீதியில் வந்த அந்த இளைஞரின் நண்பன் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவன் அங்கிருந்து தப்பி ஓடி அவனது சகோதரியின் வீட்டினுள் புகுந்துள்ளான்.

இதனையடுத்து அவனை துரத்திச் சென்ற வாள் வெட்டுகுழு அவனின் சகோதரியின் வீட்டின் பொருட்களை உடைத்து அந்த இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டனர் இதனை தடுக்க சென்றவர்கள் மீதும் வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தினர்.

அதேவேளை இந்த வாள்வெட்டு குழுவின் அராஜகத்தையடுத்து அங்கு சென்றவர்கள் வீதியால் சென்றவர்கள் மீதும்; வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தியதில் 7 பேர் படுகாயமடைந்ததையடுத்து தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்தவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இந்த தாக்குதலை மேற்கொண்ட குழு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த தாக்குதலை மேற்கொண்ட டினோஜன் வாள் வெட்டு குழு அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்திற்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும்.

இவர்கள் தொடர்சியாக இந்த பிரதேசத்தில் இடம்பெறும் ஆலைய உற்சவங்கள் விளையாட்டு போட்டிகள் போன்ற பொது நிகழ்வுகளில்; மதுபோதையில் சென்று அராஜகத்தில் ஈடுபட்டு ஒலிவாங்கிகள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர் எனவும்.

இந்த வாள்வெட்டுக் குழுவின் தொடர்சியான அட்காசத்தினால் பாடசாலை சிறுவர்கள் தொடக்கம் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவருவதாகவும் இவர்களுக்கு எதிராக பொலிசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது அசமந்த போக்கில் இருந்து வருவதாக பிரதேச புத்திஜீவிகள், பொது அமைப்புக்கள், ஆலைய நிர்வாகங்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனா.;