LOADING

Type to search

இலங்கை அரசியல்

நல்லையம்பதி அலங்காரக் கந்தனின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!

Share

பு.கஜிந்தன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்காரக் கந்தனின் கொடிச்சீலையானது செங்குத்தா பாலமுருகன் ஆலயத்தில் இருந்து தேர் பவனியுடன் இன்று 08-08-2024 காலை 09 மணிக்கு எடுத்துவரப்பட்டது.

அங்கு பால முருகனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வில் சமயக்கிரியைகள் இடம்பெற்றது. பின்னர் கொடிச்ச்லையானது அங்கிருந்து செங்குத்தா வீதியுடாக புறப்பட்டு பருத்தித்துறை வீதியுடாக வந்து, நல்லூர் ஆலயத்திற்கு சென்றடைந்தது.

நாளை காலை மஹோற்சவ கொடியேற்றம் இடம்பெறவுள்ளதுடன் 25 நாட்கள் மஹோற்சவம் இடம்பெறும்.

இன்றைய கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வில் பல இடங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்ட னர்.