LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடமாகாண புதிய ஆளுநராக லிங்கன் வேதநாயகன் அவர்கள் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

Share

பு.கஜிந்தன்

வடமாகாண புதிய ஆளுநராக லிங்கன் வேதநாயகன் அவர்கள் தமது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

குறித்த நிகழ்வு 27-09-2024 அன்று யாழ் மாவட்ட வடமாகாண அலுவலகத்தில் காலை 09.00 மணியளவில் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து சமய வழிபாட்டினை பின் உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார். இதில் சர்வமத வழிபாட்டிலும் கலந்துகொண்டார்

இவ் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம், வடமாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலன், வடமாகாண மாவட்ட அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள், மாகாண அமைச்சு க்களின் செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள், ஆளுநர்செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.