அதிமுகவை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கரின் நினைவிடத்திற்குச் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர். தொடர்ந்து அவர்கள், முத்துராமலிங்கர் சிலைக்கு கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மூவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். ...
மதுரை மாவட்டம் கப்பலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அ.தி.மு.க.வும் த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை. 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். ...
தமிழகத்தில் கிராமங்கள்தோறும் ஒன்று மருத்துவர்கள் இருப்பதில்லை அல்லது தகுந்த மருத்துவ வசதிகள் இருப்பதில்லை என தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மணி நேரமாக மருத்துவர்கள் யாரும் இல்லாததால் கடலூர் மாவட்டம் மங்களூரில் பாம்பு ...