முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்பட்டார். தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்பட்டு செல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ...
சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார். டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: இந்தியா எந்த நாட்டையும் எதிரியாக கருதுவது இல்லை. எங்களுக்கு மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் நலன்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச உறவுகளில் நிரந்தர ...
தமிழகத்தில் ஆன்மீகம் தான் வளர்ந்து ஒங்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னையை அடுத்த முவரசம்பட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை ...