சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை – திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நாளையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது நாளையதினமும் தொடரவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ...
தையட்டியில் அமைந்துள்ள சட்ட விரோதமான திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. எமது உணர்வுகளுக்கு மேலும் சுமையும் துன்பங்களும் ஏற்படுத்துகின்ற வகையில் இந்த சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். ...
போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ...