LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்கா நடவடிக்கையை மாற்றும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாதென ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

Share

அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாதென ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. “ஈரானை இனி ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது; போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்கி, பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்குவதுடன், பொருளாதார தடைகளை நீக்கி, முடக்கப் பட்ட ஈரான் சொத்துகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா உடனடியாக பதிலளிக்கவில்லை. ஒமன் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடர்கிறது.