மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஈரான் காணொளி வெளியிட்டது
Share
மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஈரான் காணொளி வெளியிட்டது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்ட நிலையில் அவரது மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால் அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்த மொஜ்தபா கமெனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் மொஜ்தபா கமெனி பெயரில் அறிக்கைகள் வெளியானது. இதில் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகளை விடுத்து இருந்தார். தனது தந்தையின் இறுதிச் சடங்கிலும் அவர் பங்கேற்கவில்லை.இதற்கிடையே மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் எந்த நேரத்திலும் இறக்கக்கூடும் என்றும் இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டது. மேலும் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இந்த தகவல்களை மேலும் சில இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் போருக்குப் பின் முதல் முறையாக மொஜ்தபா கமெனியின் காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த காணொளியை ஈரானின் அரசு செய்தி நிறுவனமான மெஹர் வெளியிட்டது. அதில் மொஜ்தபா கமெனி தரையில் அமர்ந்தபடி சிலருடன் உரையாடுவது மற்றும் கைகளை நன்றாக அசைப்பது இடம்பெற்று உள்ளது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தோற்றம் அளிக்கிறார். மொஜ்தபாவின் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பதிலளிக்கும் விதமாகவும், ஆதாரமாகவும் இந்த காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது.















