LOADING

Type to search

உலக அரசியல்

ஆப்கானிஸ்தான்: தங்கச்சுரங்கம் இடிந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

Share

ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நாட்டில் பல்வேறு தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல சுரங்கங்கள் சட்டவிரோதமாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தகார் மாகாணம் ஷா அப் மாகாணம் ஹா மஸ்ட பகுதியில் தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில் 5 பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 5 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.