LOADING

Type to search

உலக அரசியல்

இந்தியாவின் போர் நிறுத்த யோசனையை பரிசீலிக்க தயாரென உக்ரைன் அறிவித்துள்ளார்

Share

இந்தியாவின் போர் நிறுத்த யோசனையை பரிசீலிக்க தயாரென உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அன்ட்றில் சிபிஹா அறிவித்துள்ளார். உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இந்த போர், 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டும், போர் முடிவுக்கு வரவில்லை. தூதரக முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதற்கிடையே, இந்த வாரம் மாஸ்கோவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஷிய அதிபர் புதின், “உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளார். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அந்த பிரச்சினையை எழுப்புவார். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிக நல்ல யோசனைகளை அவர் வைத்துள்ளார்” என்று புகழாரம் சூட்டினார். இந்தநிலையில், இந்தியாவின் யோசனையை பரிசீலிக்க தயார் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அன்ட்றில் சிபிஹா அறிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தத்துக்கு சாத்தியமான யோசனைகள், இந்தியா, துருக்கி, எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் இருந்து வந்துள்ளன. அவற்றில் இந்தியாவின் யோசனை, விரிவானதாக இருக்கிறது. அதை பரிசீலிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், எந்த ஒப்பந்தமும் போர் நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி, எரிசக்தி, துறைமுக கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், கருங்கடல் நிலவரம் ஆகியவற் றுக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.