உகாண்டாவில் வேன் மீது லோரி மோதி கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்
Share
உகாண்டாவில் வேன் மீது லோரி மோதி கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. அந்நாட்டின் மத்திய மாகாணத்தில் உள்ள கலுங்கு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 18 பேர் பயணித்தனர். கலுங்கு மாவட்டத்தின் கமுங்கா நகர் அருகே சென்றபோது நெடுஞ்சாலையில் எதிரே வேகமாக வந்த லோரி, வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















