உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த ரஷியா திட்டமிட்டதற்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்
Share
உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த ரஷியா திட்டமிட்டதற்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையே, ரஷியா மிகப்பெரிய புதிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைன் விமானப்படையும் பாதுகாப்புப் படைகளும் தயாராக உள்ளன. உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நட்பு நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் ” என்றார்.















