LOADING

Type to search

உலக அரசியல்

கருங்கடல் பகுதியில் 23 இந்தியர்களுடன் சென்ற வர்த்தக எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது

Share

ரஷியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள கருங்கடல் பகுதியில் 23 இந்தியர்களுடன் சென்ற லைபீரிய எண்ணெய் கப்பல் மீது, உக்ரைன் ராணுவம் ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு முக்கிய வர்த்தக போக்குவரத்து மையமாக கருங்கடல் பகுதி விளங்குகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய துறைமுகமான ஒடெசா மற்றும் கிரிமியன் தீபகற்பம் உட்பட வடக்கு மற்றும் வடமேற்கு கடற்கரைகளை ஒட்டி கருங்கடலின் ஒரு பகுதி அமைந்துள்ளது. ரஷியாவின் கிராஸ்னோடர் கிராய் மற்றும் சோச்சி உள்ளிட்ட வடகிழக்கு கடற்கரையையும், 2014-இல் உக்ரைன் இடமிருந்து தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்ட கிரிமியன் தீபகற்பத்தையும் ஒட்டி கருங்கடலின் மற்றொரு பகுதி அமைந்துள்ளது. மேலும் கருங்கடல் எல்லையின் தெற்கில் துருக்கியும், மேற்கில் ருமேனியா மற்றும் பல்கேரியாவும், கிழக்கில் ஜார்ஜியாவும் அமைந்துள்ளன. ரஷியா 2022-இல் உக்ரைன் மீது தனது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதில் இருந்து, கருங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. சமீப நாட்களாக ருமேனிய கடற்கரைக்கு அருகே உக்ரைன் பொருட்களை ஏற்றிச் சென்ற வர்த்தக கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. மேலும் இந்த தாக்குதலில் கப்பல் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் உக்ரைன் தெரிவித்தது.

இந்த நிலையில் ரஷியாவின் சோச்சி நகருக்கு அருகிலுள்ள கருங்கடலில், அஃப்ராமக்ஸ் என்ற எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து முழுவதுமாக சேதமடைந்த கப்பலில் இருந்த 23 இந்தியர்களை அவசர மீட்பு குழுவினர் மீட்டனர்.மேலும் ரஷியாவின் தெற்கு கிராஸ்னோடார் பகுதிக்கு அருகிலும் எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து எரிவதாக செய்தி வெளியாகியுள்ளது.