கனகர் கிராமம் மீட்பு தமிழ் தேசிய அரசியலின் உரிமைக்கான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி; பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஸாரப்-
Share
(கனகராசா சரவணன்)
வடக்கில் கோப்பாபுல கிழக்கில் கனகர் கிராமம் மீட்பு தமிழ் தேசிய அரசியலின் உரிமைக்கான போராடத்துக்காக உயிரை துட்சமாக மதித்து இரவு பகலாக போராடி உரிமையை வென்றெடுத்தது இந்த மக்களுக்கு முதலாவது பராட்டு கிடைக்க வேண்டும்.அதேவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடத்தை தாண்டிவிட்டது அந்த காணி இன்னும் உரிய மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது இந்த அரசின் ஒரு தோல்;வியாகும். என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஸர்ரப் தெரிவித்தார்.
பொத்துவில் 60 கட்டை கனகர் கிராமம் மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் வழங்கிய நிதியுடன் மீதி நிதியை புலம் பெயர்ந்த அமைப்பின் கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றத்தினால் இலண்டணில் அமரத்துவம் அடைந்த யாழ்பாணத்தைச் சேர்ந்த கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நினைவாக 5 வீடுகளை அமைப்பதற்கு அரைவாசி நிதிவழங்கி நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சம்பிராய பூர்வமாக 25ம் திகதி புதன்கிழமை (26) திறந்துவைக்கப்பட்டது இதன் போது கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து பேசுகையில்
கனகர் கிராமம் மீட்கப்பட்ட சம்பவம் என்பது ஒரு வரலாறு என்பதுடன் ஒரு தனிமனிதன் தன்னுடைய காணி உரிமையை மீட்பது என்பதை தாண்டிய ஒரு போராட்டமும் இல்லை ஒரு அரசியலும் இல்லை. இந்த கனர்கிராம பூர்வீக நிலத்தை மீட்பதற்கு இந்த மக்கள் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல வருடக் கணக்கில் ஆபத்தான இடமான யானை, மற்றும் காட்டு விலங்குகளின் பாதிப்புக்கள் இருந்தும் கூட ஒரு துளி பயமும் இல்லாமல் காடுகளாக இருந்த சமயத்திலே ஒரு கூடாரத்தை கட்டி ஒரு நாள் இரு நாள் அல்ல தொடர்சியாக 4 வருடம் உரிமையை வென்றெடுத்தது இந்த மக்களுக்கு தான் முதலாவது பராட்டு கிடைக்க வேண்டும்.
கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த செந்தில் தொண்டாமான் இந்த மக்களுக்கான உரிமம் வழங்கப்பட்டது அப்போது நான் சொல்லிக் கொண்ட விடையம் நல்லாட்சி அராங்கத்தின் ஆட்சி காலத்தில் மக்கள் இழந்த காணிகளை வனவிலங்கு மற்றும் வன பரிபால, பாதுகாப்பு திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட எநிலங்கள் மக்களிடம் வழங்கப்பட்டது.
வடக்கில் கோப்பாபுல என்றால் கனகர்கிராமம் கிழக்கில் மீட்டகப்பட்டது மிக முக்கியமானது அப்போது போராட்டம் நடக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் உட்பட பலர் ஒத்துழைப்பு வழங்கினா.; இது தான் தமிழ் தேசிய அரசியலின் வெற்றி உரிமைக்கான போராடத்துக்காக உயிரை துட்சம் என மதித்து அந்த ஓர்மக்குணம்தான் அந்த பெரிய வெற்றியை தந்திருக்கின்றது. அந்த வெற்றி சகல வசதிகளுடன் கூடிய ஒரு கிராமாக உருமாற்றி கொடுக்கும.
நிலத்தை மீட்பது என்பது பெரும் வரலாறு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் 1985 க்கு முன்னு மக்களின் பாவனையாக அத்தாட்சிகள் இருந்தால் அத்தகைய காணிகளை விடுவித்து தருவோம் என வருடக்கணக்கில் கள ஆய்வுகள் உட்பட பல முயற்சிகள் செய்யப்பட்டு அம்பாரை கச்சேரியில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வனவிலங்கு, வன வரிபாலன சபையினாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்கு கையளிக்கும் முயற்சி மிக பெரும் அளவில் நடைபெற்று 15 ஆயிர் ஏக்கர் விடுவிக்கப்படும் என காத்துக் கொண்டிருந்த போது கிடைத்த செய்தி ஆட்சி மாற்றம்
ஒரே விடையத்துக்காக மீண்டும் மீண்டும் ஆட்சிகள் மாறுகின்ற போது மீண்டும் மீண்டும் மக்களை அழைப்பது விண்ணப்பபடிவங்களை நிரப்புவது தகவல்களை பெறுவது என்ற நிலை ஏனைய ஆட்சியாளர்களிடம் இருந்திருக்கலாம் ஆனால் நாங்கள் மக்களுக்கான ஆட்சியை செய்பவர்கள் மக்களோடு மக்களாக இருக்கின்றோம் என சொல்லுகின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சொல்லிக் கொள்ளும் செய்தி
நீங்கள் தயவு செய்து இந்த கனகர் கிராமத்தில் குடியிருந்த மக்களில் 74 பேருக்கு வழங்கப்பட்டு மிகுதியான 146 பேருக்கு வழங்கப்படவில்லை என்றால் வழங்கப்பட வேண்டிவர்களுக்கு வழங்குவது எடுக்கப்பட்ட தீர்மானத்தை செய்ய வேண்டும்.; இது மீள்குடியேற்ற காணியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும் அதைவிடுத்து காணி அற்றவர்களுக்கான காணி என்கின்றபோது சட்டரீதியான பார்வை ஒன்று இருக்கின்றது எனவே இது சரியானதாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே மீள்குடியேற்ற திட்டத்தில் வழங்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட 210 குடும்பங்களுக்கும் கிடைத்திருக்கும் எனவே இந்த அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் சட்டத்தை சட்ட ரீதியாக செய்யுங்கள் எந்தவித அரசியல் சுய இலாபமற்ற ஊழல் அற்ற அரசு என நீங்கள் தேர்தலுக்கு முன்பும் இன்றும் சொல்லிக் கொள்வது உண்மையாக இருந்தால் முதலாவதாக பாதிக்கப்பட்ட இந்த கனகர் கிராம மக்களின் காணிகள் கையளிப்பதோடு அம்பாறை மாவட்டத்தில ;15 ஆயிரம் ஏக்கல் காணிகளையும் நீங்கள் உடனடியாக விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்ய வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும். ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மிக நீண்ட தூரமான உறவு இருக்கின்றது இந்த கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்தபோதும் எதிர்வரும் காலத்தில் ஆட்சி செய்ய முற்படும் போதும் இந்த இரு பெரும் கட்சிகளினது இணைவு என்பது மிக முக்கியத்துவம் உட்பட்டதாக பார்க்கப்படும் எமது பொத்துவில் பிரதேச சபையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் சேர்ந்த ஆட்சி செய்து வருகின்றோம். அது போன்று அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களிலும் சேர்ந்து ஆட்சி செய்துவருகின்றோம்
உலகில் சுற்றுலாத்துறைக்கு பெயர்பெற்ற பொத்துவில் பிரதேசத்திலே குடிப்பதற்கு தண்ணீர் இல்லை எனவே குடிநீருக்கும் வயல்களுக்கான தண்ணீருமாக பூரணமாக பயணை பெறமுடியாத நில அமைப்பை கொண்டிருக்கின்றோம் நிலத்தடி நீரி வற்றி போனது பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது
இந்த குடிநீர் என்பது பாரிய பிரச்சனை கடந்த கோடை காலத்தில் அதிகமான நீர் வழங்கப்பட்டது செல்வபுரம் கிராமத்துக்கு எனவே கனர்கிராமம், செல்வபுரம், ஹிதாயபுரம், உட்பட பல இடங்கள் இந்த குடிநீர் இல்லாமையினால் அதிகமான வர்களுக்கு புற்றுநோய் உருவாகியுள்ளது. இது தொடர்பாக பல முறை அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசிய போதும் எதுவும் இடம்பெற வில்லை
இருந்தபோதும் பிரதேச சகை ஊடாக இந்த கிராம மக்களுக்கு தண்ணீர் தாங்கியை வைத்து அதில் தொடர்ச்சியாக குடிநீர் வழங்குவோம் ஆனால் இது ஒரு தற்காலிகமானது எனவே இந்த தண்ணீருக்கான நிரந்தரமான தீர்வை தேடி எடுக்கவேண்டும் எனவே பொத்துவிலுக்கு நல்லது செய்ய வேண்டுமாக இருந்தால் குடிநீர் பிரச்சனைக்கு உதவுமாறு புலம் பெயர் அமைப்புககளின் பெர்து அமைப்புகளினது உதவி தேவைப்படுகின்றது என்றார்.















