கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் அவர்களை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழ் பேசும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள்
Share
தற்போது தமது 10 நாள் விண்வெளிப் பயணத்தில் சந்திரனைச் சுற்றிவரும் பயணத்தில் உள்ளடங்கிய நால்வரில் கனடிய விண்வெளி வீரரான -Jeremy Hansen, – ஜெர்மி ஹேன்சன் அவர்களும் ஒருவராக இணைந்து கனடாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவரை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழ் பேசும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் சில நிமிட நேரங்கள் உரையாடி மகிழ்ந்தார்.
2026, ஏப்ரல் 1 அன்று விண்வெளிக்கு ஏவப்பட்ட இந்தத் பயணத் திட்டத்தில், கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சனும் இடம்பெற்றுள்ளார். இவர், புவியின் தாழ் சுற்றுப்பாதையைக் கடந்து நிலவை நோக்கிப் பயணம் செய்யும் முதல் கனடியர் மற்றும் முதல் அமெரிக்கர் அல்லாதவர் என்ற வகையில் தற்போது வரலாறு படைக்கிறார். அவரை நாம் அனைவரும் வாழ்த்துவோம்















