LOADING

Type to search

சினிமா

கிரிஷ் இயக்கத்தில் கௌரி கிஷன் நடிக்கும் “தாரகை” படத்தின் பதாகை வெளியானது

Share

கிரிஷ் இயக்கத்தில் கௌரி கிஷன் நடிக்கும் “தாரகை” படத்தின் பதாகை வெளியானது. ’96’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்த இளம் நடிகை கௌரி கிஷன், தற்போது முற்றிலும் ஒரு அழுத்தமான பெண் மையக் கதாபாத்திரத்தில் களம் இறங்கியுள்ளார். ஸ்பீடு ரீல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘தாரகை’ எனப் பெயரிடப்பட்டு, அதன் அசத்தலான பதாகை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கை தேடல், தனிப்பட்ட தேர்வுகள், உறவுகள் மற்றும் அவர்களின் சுதந்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்வதை இந்த பதாகை உணர்த்துகிறது. இந்த திரைப்படத்தை கிரிஷ் இயக்குகிறார். கிரிஸுடன் சேர்ந்து துஹிரன் இணைந்து கதை எழுதியுள்ளனர். நாகராஜ் வசனங்களை எழுதியுள்ளார்.’தாரகை’ திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார்.

கார்த்திக் நேதா, விக்னேஷ் ராமகிருஷ்ணா மற்றும் மு.வி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, ஆலன் பி ஜான் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குனராக அருண்ஷங்கர் துரை பொறுப்பேற்றுள்ளார். தனித்துவமான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கௌரி கிஷன், இந்த ஆழமான எமோஷனல் பயணத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.