LOADING

Type to search

உலக அரசியல்

கென்யாவில் ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்

Share

கென்யாவில் ஹெலிகாப்டர் மலையில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டில் பல்வேறு தேசிய பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளை பார்வையிட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் வனப்பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதிகளும் உள்ளன. இந்நிலையில், கென்யாவின் லைசபா பகுதியில் உள்ள தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகள் 6 பேர் உள்பட மொத்தம் 7 பேர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள ஹெலாக்வா மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.