LOADING

Type to search

உலக அரசியல்

கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்

Share

கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டில் ஐஎஸ், அல்கொய்தா, போகோஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களும், கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவ்சரி நகரில் அருகே அமைந்துள்ள மேட்குவா கிராமத்திற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். ஐஎஸ் பயங்கரவாதிகளின் கிளை பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அண்டை கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.