LOADING

Type to search

உலக அரசியல்

சவுதி அரேபியாவின் சீன தயாரிப்பு டிரோனை சுட்டு வீழ்த்திவிட்டோமென ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Share

சவுதி அரேபியாவின் சீன தயாரிப்பு டிரோனை சுட்டு வீழ்த்தி விட்டோமென ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஏற்பட்ட மோதல், தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் ராணுவ தளங்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், ஈரானுக்கு எதிரான தளங்களை தாக்கும் பணியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, ஜெட்டா மற்றும் தைப் உள்ளிட்ட நகரங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கப்பட்டு, அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதன்பின்னர், மெக்காவின் தெற்கே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை கொண்டும், டிரோன்களை கொண்டும் தாக்குதல் நடத்தினர் என தகவல் வெளியானது. இதனால், மக்களிடையே பரவலாக அச்சம் ஏற்பட்டது. இதனை முன்னிட்டு சவுதி அரசு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டு கொண்டது. எனினும், டிரோன்களையும், ஏவுகணைகளையும் சவுதி அரேபிய படையினர், நடு வழியிலேயே சுட்டு வீழ்த்தி விட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது.