LOADING

Type to search

சினிமா

சந்தானம் நடிக்கும் “லவ் பைட்” படத்தின் காணொளி வெளியீடு

Share

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘லவ் பைட்’ திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செல்வின் ராஜ் சேவியர் ‘லவ் பைட்’ படத்தை இயக்குகிறார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கக் கூடிய நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக ‘லவ் பைட்’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர். சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் இசையமைக்கிறார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய, வி. சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, ஆர். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை இயக்க, மீனாட்சி என். ஆடைகளை வடிவமைக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க செல்வின் ராஜ் சேவியர் இயக்க சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’ படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.