LOADING

Type to search

இந்திய அரசியல்

‘திமுகவை எதிர்க்கத்தான் அதிமுக… டிடிவி, சசிகலாவை மீண்டும் இணைக்கவேண்டும்’ – எஸ்.பி. வேலுமணி

Share

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தப் பின் சிவி சண்முகம் தரப்பு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது முதலில் பேசிய சிவி சண்முகம் திமுகவின் மறைமுக ஆதரவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயற்சி செய்ததாகவும், அதனைத் தங்களது தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஏற்க மறுத்ததாகவும் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டினார். அவரைத்தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவை நாங்கள் பிரிப்பதாக ஐடி விங்கை வைத்து பொய் பரப்புகிறார்கள். 2019, 2021, 2026 என தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்துள்ளது. எதனால் தோல்வி என்பதை பொதுச்செயலாளர் ஆய்வு செய்யவேண்டும்.

அதிமுக எங்களின் உயிர்மூச்சு. அதனால் இதனை உடைக்கக்கூடிய எண்ணம் எங்களுக்கு இல்லை. அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, ஜேசிடி பிரபாகர், செங்கோட்டையன் போன்றரை ஒன்றிணைக்க வேண்டும் என்றுதான் பேசினோம்.