சாருலதா மணியின் “தென்றலே” பாடல் விஜய் சேதுபதி வெளியிட்டார்
Share
பாடகி முனைவர்.சாருலதா மணி தனது புதிய சுயாதீன பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார். திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் விஜய் சேதுபதி இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல் படைப்பாக “தென்றலில்” உருவாகியுள்ளது. தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை அழகாக இணைக்கும் திறமையாலும் அறியப்படும் அவரது இந்தப் புதிய படைப்பு, இசைப் பிரியர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மெல்லிசை அனுபவமாக அமைந்துள்ளது. சாருலதாவின் குரலில் பல ஹிட் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடம் பெற்றவை. என் உச்சி மண்டைல (வேட்டைக்காரன் ), சில்லஸ் (வேலாயுதம் ), தீயே தீயே (மாற்றான் ), கண்ணுக்குள் பொத்திவெப்பேன் (திருமணம் இன்னும் நிக்காஹ் ), அஞ்சு வண்ண பூவே போன்ற பாடலை பாடியவர் சாருலதா. புது முகங்கள் மாளவிகா & தவன் நடித்து தரேன் கார்த்திக் இயக்கி உள்ளார். தென்றலில் இசையமைப்பு, பாடலாசிரியர் & பாடகி சாருலதா மணி.















