LOADING

Type to search

இந்திய அரசியல்

சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரித்தார். சென்னை சென்டிரலில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடி, வாக்கு சேகரித்தார். பின்னர் மெட்ரோ வளாகத்தில் முதல்-அமைச்சருடன் பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டனர். இதனிடையே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தஞ்சையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அவர் தஞ்சையில் உள்ள 8 தொகுதிகளை சேர்ந்த திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.