LOADING

Type to search

சினிமா

தனுஷின் “டி56” படத்திற்கு “லப்பர் பந்து” இயக்குநர் பதிவேற்றம் கொடுத்தார்

Share

தனுஷ் பிறந்தநாளையொட்டி, ‘லப்பர் பந்து’ திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புதிய பதாகையை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். தனுஷ் தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனுஷின் ‘டி56’ படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளார். தனுஷின் ‘டி56’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ‘ஏஸ், மதராஸி, காந்தாரா’ போன்ற படங்களில் நடித்த ருக்மணி வசந்த் ஆரம்பத்தில் பேசப்பட்டுவந்தார். அவரிடம் அதிக நாட்கள் கேட்கப்பட்டிருந்ததாம். தன்னால் அதிக நாட்கள் தேதி கொடுக்கமுடியாது என்ற நிலையில், ருக்மிணி வசந்த் இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம். அதன் காரணமாக தற்போது இளம் நடிகை பிரீத்தி முகுந்தனை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘லப்பர் பந்து’ திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர் தனுஷின் ‘டி56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆடி மாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ பதிவேற்றத்தை வெளியிட்டுள்ளார். கீச்சகத்தில் தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “உங்களுக்காக ஒரு பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் படத்தை இயக்குவேன் என்று நம்புகிறேன், விரும்புகிறேன் மற்றும் உறுதியளிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் D. ” என்று குறிப்பிட்டு அதனோடு, “ஆடிக்கு அப்புறம் பூச ஆரம்பம்” என்று குறிப்பிட்டு பதிவேற்றம் கொடுத்திருக்கிறார்..