LOADING

Type to search

சினிமா

“ராஜாஸ் பிளேலிஸ்ட்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

Share

ஜெயன் அறிமுகமாகும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இளையராஜாவின் அண்ணனான தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு கதை எழுத யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் கதைப் பகுதியை முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு எழுதியுள்ள நிலையில், படத்திற்கான திரைக்கதை மற்றும் இயக்கத்தை சுஜித் என் சுப்ரமணியம் மேற்கொள்கிறார். இப்படத்தை எலிபேண்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். ஜெயனுடன் சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி, பிரகதீஸ்வரன் பூபாலம், இந்துமதி, ரேஷ்மி, ராஜிந்த், ராம்குமார், மீனா, திலகவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வாரிசு நடிப்பில் களம் இறங்குவதால், இந்த ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இப்போதே தொடங்கியுள்ளது. இசைத்துறையில் பொன்விழா கண்ட இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது பாடல்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்யூசராக இணைந்திருப்பது படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.