LOADING

Type to search

இந்திய அரசியல்

“தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி தேவையில்லை, நிலத்தை மேலும் கையகப்படுத்த அனுமதிக்க கூடாதென சவுமியா அன்புமணி தெரிவித்தார்

Share

“தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி தேவையில்லை, நிலத்தை மேலும் கையகப்படுத்த அனுமதிக்க கூடாதென சவுமியா அன்புமணி தெரிவித்தார். என்.எல்.சி. ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அழித்துவிட்டது என்றும், மேலும் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்வதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி தெரிவித்தார். இதுகுறித்து சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகைள் மீதான விவாதத்தின் போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு துறைகளில் 36 ஆயிரம் மெகாவாட் உள்ளது. நாம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டோம். இதில், என்எல்சியின் பங்கு 2 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. ஆகையால், நமக்கு என்எல்சி தேவையில்லை. என்எல்சி நிறுவனம் தனது சிஎஸ்ஆர் நிதி முழுவதையும் வடமாநிலங்களுக்குத்தான் வழங்குகிறது. சிஎஸ்ஆர் நிதியைப் பயன்படுத்தி தமிழகத்தில் தடுப்பணைகள் அல்லது நெல் குடோன்கள் கட்டித் தர வேண்டும். ஏற்கனவே 40,000 ஏக்கர் நிலத்தை அவர்கள் அழித்துவிட்டு, இரவோடு இரவாக அங்கிருந்த மக்களை ‘விஜயமாநகரம்’ என்ற இடத்தில் தங்க வைத்து, மூட்டை முடிச்சுகளுடன் அகதிகளாகச் செல்ல வைத்தனர். அவர்களுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை இருக்கும்போது, மேலும் 60,000 ஏக்கர் நிலத்தை எடுக்க என்.எல்.சி. நிர்வாகம் தயாராகி வருகிறது; அதற்குப் பயங்கர முனைப்புடன் செயல்பட்டது. அந்த சமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி அனைவரையும் அழைத்துச் சென்று என்.எல்.சி. நிறுவனத்திற்குப் பூட்டு போடும் போராட்டை நடத்தினார். அப்போது வஜ்ரா வாகனத்தைக் கொண்டு அந்தப் போராட்டத்தை அடக்க முயற்சிகள் நடந்தன; அனைத்தையும் மீறி பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. எனவே, மேலும் 60,000 ஏக்கர் நிலத்தை எடுப்பதற்குத் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது என்பதைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அங்கு இளநீரில் கூட நச்சுத்தன்மை (டயாசின்) இருக்கிறது.

இவ்வாறு சவுமியா அன்புமணி ஆவேசமாக தெரிவித்தார்