LOADING

Type to search

சினிமா

‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்தார்

Share

‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன்  கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்தார். நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி தனது 33-வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ‘தசரா’வைப் போலவே நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இதில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நானியுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், அதில், “அவரது தலைமுடியைத் தொட்டால் அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டு, நானியுடன் மீண்டும் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.