LOADING

Type to search

இந்திய அரசியல்

த.வெ.க. வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை

Share

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4-ந்தேதி எண்ணப்பட உள்ளன. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. அந்த கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் எடப்பாடி தொகுதியில் நிறுத்தப்பட்ட த.வெ.க. வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 233 தொகுதியில் த.வெ.க. களம் கண்டது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என த.வெ.க. தலைமை அறிவித்துள்ளது. அனைத்து வேட்பாளர்களும் 17சி ஒரிஜினல் படிவத்தை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .17சி என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அடங்கிய படிவம் ஆகும். இது தேர்தல் அலுவலர் மூலம் வேட்பாளர்களிடம் வழங்கப்படுகிறது. இந்த படிவம் தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.