நேபாளத்தில் தொடர் மழையால் 14 பேர் பலியாகியுள்ளனர்
Share
நேபாளத்தில் தொடர் மழையால், கடந்த 72 மணிநேரத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். நேபாளத்தில் சமீபத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. பலர் காயமடைந்தனர். அந்த சோக நிகழ்வில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாத சூழலில் தற்போது மற்றொரு பேரிடரில் சிக்கி தவித்து வருகின்றனர். அந்நாட்டில், கடந்த 24-ந்தேதி முதல் பெய்து வரும் தொடர் மழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பரவலாக ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவுகளால், பல்வேறு பகுதிகளிலும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இந்த பேரிடரால், கடந்த 72 மணிநேரத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் மழை தொடர்பான பேரிடரில் சிக்கி 6 பேர் பலியானார்கள். தவிர, காலை மியாக்தி மாவட்டத்தில் நிலச்சரிவால் 4 பேர் பலியானார்கள். அன்னபூர்ணா கிராம கவுன்சில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால், தேடுதல் மற்றும் மீட்பு பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.















