புதுக்கோட்டையில் நடைபெற்ற 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாட்டில் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களுக்கு ‘ஹைக்கூ பேரொளி’ என்ற பெருமை மிகு விருது!
Share
தமிழ் ஹைக்கூ வரலாற்றி புதிய எழுச்சியுடன் கடந்த ஐந்தாண்டுகளாக நந்தவனம் சந்திரசேகரனின் ஒருங்கிணைப்பில் கவிஞர் மு.முருகேஷ் வழிநடத்தவில் தமிழ் ஹைக்கூ உலக மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 5 ஆவது மாநாடு புதுக்கோட்டையில் மே 17-5-2026 அன்று புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம், இனிய நந்தவனம் மாத இதழ், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து சிறப்பாக நடத்திய மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியா, இலங்கை, துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் ஹைக்கூ கவிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் வரவேற்புக்குழு செயலாளர் கவிஞர் மகா சுந்தர் அனைவரையும் வரவேற்றார் அழகப்பா பல்கலைக்கழக மேநாள் துணைவேந்தர் முனைவர் சோ.சுப்பையா மாநாட்டைத் தொடங்கிவைத்து எழிலுரை நிகழ்தினார். ஒவியக்கவிஞர் அமுதபாரதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா. முத்துநிலவன், கவிஞர் முதுவை ஹிதாயத், உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர் மன்றத் தலைவர் கவிஞர் கா. நா. கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நான்கு மாநாடுகள் கடந்தவந்தபாதை என்ற தலைப்பில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் தனது அனுபவர்கள் குறித்து உரை நிகழ்த்தினர், ஹைக்கூ மாநாடுகள் எதற்காக? என்ற தலைப்பில் மாநாட்டு ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் உரை நிகழ்த்தினார். இம்மாநாட்டை முன்னிட்டு ஹைக்கூ கவிதைகளுக்காவே வெளிவரும் “தூண்டில்” சிறப்பு மலர் வெளியிடப்பட்டது காவல் கண்காணிப்பாளர் கவிஞர் மணி சண்முகம் மலரை வெளியிட வாசகர் பேரவைச் செயலாளர் பேராசியர் சா.விஸ்வநாதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டர்
மலேசிய கவிஞர் ந.பச்சைபாலன் தலைமையில் என்னை எழுதிய ஹைக்கூ என்ற தலைப்பில் நடைபெற்ற ஹைக்கூ அயலகப் பகிர்விங்கில் மகேந்திரன் நவமணி. மலேசியா, செந்தில்குமார். அந்தமான், முகம்மது இர்ஷாத். இலங்கை, சிவா லெனின். மலேசியா, பெரியார் விஜயன். கேரளா ஆகியோர் தங்களின் ஹைக்கூ அனுபவங்களைப் பகிர்ந்தனர், ஹைக்கூ வாசிப்பரங்கில் அறுபதுக்கும் பேற்பட் கவிஞர்கள் ஹைக்கூ வாசித்தனர்
கவிஞர் ஆதிரா முல்லை தலைமையில் நடைபெற்ற மகளிருக்கான ஹைக்கூ அனுபவப் பகிர்வரங்கில் கவிஞர் கோ. லீலா, கவிஞர் பிரேமா கிறிஸ்டி, கவிஞர் கயல்விழி கவிஞர் அன்புத் தோழி ஜெயஸ்ரீ ஆகியோர் தங்கள் ஹைக்கூ அனுபவங்களைப் பகிர்ந்திட கவிஞர் ஜோ. டெய்சிராணி ஒருங்கிணைத்தார்
மாநாட்டின் முத்தாய்ப்பாக, ஒவியக்கவிஞர்.அமுதபாரதியின் அமுதபாரதி ஆயிரம் என்ற ஹைக்கூ நூல் உட்பட ஹைக்கூ கவிதைகள், ஹைக்கூ பற்றிய கட்டுரைகள் என 47 நூல்கள் வெளியிடப்பட்டது, நிறைவாக கவிஞர் தங்கம்மூர்த்தியின் ஹைக்கூ வளர்ச்சிப்பணிகளைப் பாராட்டி ஹைக்கூ பேரொளி என்ற விருது வழங்கப்பட்டது, அயலகத்திருந்து பாநாட்டில் கலந்துகொண்ட கவிஞர், ந.பச்சைபாலன், கவிஞர் செந்தில்குமார், கவிஞர் செலுகை சி.பழனிவேல், கவிஞர் முகம்மது இர்ஷாத், கவிஞர் மகேந்திரன்நவமணி, கவிஞர் சிவா லெனின் ஆசியோருக்கு ஹைக்கூ சுடரொளி விருது வழங்கப்பட்டது
மாநாட்டு நிறைவுரையாக உலகம் யாவையும் ஹைக்கூ.. என்ற தலைப்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி நிறைவுப் பேருரையாற்றினார்
நிகழ்வில் ஒவியத்திற்கான ஹைக்கூ எழுதும் போட்டியிலும், கவியரங்கில் வாசித்த சிறந்த ஹைக்கூவுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது பேராசிரியர் மு. கருப்பையா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கவிஞர் கவி.முருகபாரதி நிகழ்வை ஒருங்கிணைந்தார்,
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டை பேராசிரியர், சா.விஸ்வநாதன், வழக்கறிஞர் மு.செந்தில்குமார், பாவேந்தர் ரெ.சு. காசிநாதன் , மகாத்மா த. ரவிச்சந்திரன், நெ. இரா.சந்திரன், இரா.இராஜநாராயணன், விதைக்கலாம், ஸ்ரீ மலையப்பன், கவிஞர் சு.பீர்முகம்மது, காசாவயல் கண்ணன், நேசன் மகதி, சி.பிரசாத், பேரா.சி. அய்யாவு, மு.கீதா, மு.உதயகுமார், ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்து தேநீர் மற்றும் உணவுப் பரிமாறல், நேர நிர்வாகம், பங்கேற்பாளர்களை உபசரித்தல் என அனைத்தையும்
சிறப்பான செய்திருந்தனர்.
நந்தவனம்சந்திரசேகரன்
nandavanam10@gmail.com
0091 9443284823
















