மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற தெய்வீக கிராம நிகழ்வு .
Share
மன்னார் நிருபர்
(29-07-2026)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலக ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின் இணையம் இணைந்து ஏற்பாடு செய்த தெய்வீக கிராம நிகழ்வு 29ம் திகதி அன்றைய தினம் புதன்கிழமை (29-07-2026) காலை மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் அ.தனுஜன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
அன்று புதன்கிழமை (29) காலை மன்னார் பிரதான பாலத் தடியில் இருந்து மன்னார் நகர மண்டபம் வரை கலாச்சார பேரணி இடம்பெற்றது.
குறித்த பேரணியில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் சைவத்திரு செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீப் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,ஆகியோர் உள்ளடங்களாக அறநெறி பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு சொற்பொழிவு,சிவதாண்டவ நாடகம்,கௌரவிப்பு நிகழ்வு,பண்ணிசை,நடனம்,ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றது.















