மாதவன் நடிக்கும் “ஜி.டி.என்” படத்தின் முன்னோட்டம் வெளியானது
Share
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘ஜி.டி.என்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்த படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா கோவை செட்டிபாளையத்தில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், நடிகைகள் பிரியாமணி, துஷாரா விஜயன், இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினரும், ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். விழாவுக்கு முன்பாக, ஜி.டி.நாயுடு தயாரித்த முதல் பேருந்து மற்றும் பழமையான கார்கள் அணிவகுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பழமையான வாகனங்களிலேயே படக்குழுவினர் விழா அரங்கிற்கு வருகை தந்தனர். ஜி.டி.நாயுடுவின் சாதனைகளையும் அறிவியல் பங்களிப்பையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் 17 ஆம் தேதி வெளியீடு என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விரைவில் திரைக்கு வரும் என முன்னோட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘ஜி.டி.என்’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.















