LOADING

Type to search

சினிமா

விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி 2” படம் முதல் நாளில் ரூ. 3 கோடி வசூலித்துள்ளது

Share

விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி 2” படம் முதல் நாளில் ரூ. 3 கோடி வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இவர் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தை ஏற்கனவே இயக்கியிருந்தார். நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இயக்கியுள்ளார். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதல் பாகத்தை போல படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தைப் போலவே கமர்சியல் அம்சங்களுடன் கூடிய திரைப்படமாகத் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் மோக்ஷாவின் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருவதால் படக்குழுவும் நம்பிக்கையுடன் உள்ளனர். இதனால், இரண்டாம் பாகமும் வணிக ரீதியான வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ முதல் நாள் வசூலாக ரூ. 3 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.